எண்ணாகமம் Chapter 1 TAMIRV Bible Verse Images

எண்ணாகமம் 1 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share எண்ணாகமம் 1 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


எண்ணாகமம் 1:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இஸ்ரவேல் மக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், யெகோவா சீனாய் வனாந்திரத்தில் இருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:

எண்ணாகமம் 1:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
“நீங்கள் இஸ்ரவேலர்களின் முழுச்சபையாக இருக்கிற அவர்கள் தகப்பன்மார்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள ஆண்களாகிய எல்லா தலைகளையும் ஒவ்வொருவராக எண்ணிக் கணக்கெடுங்கள்.

எண்ணாகமம் 1:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் அவர்களுடைய சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப்பாருங்கள்.

எண்ணாகமம் 1:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஒவ்வொரு வம்சத்திற்கும் ஒவ்வொரு மனிதன் உங்களோடு இருக்கவேண்டும்; அவன் தன்னுடைய பிதாக்களின் வம்சத்திற்குத் தலைவனாக இருக்கவேண்டும்.

எண்ணாகமம் 1:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உங்களோடு நிற்கவேண்டிய மனிதர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய மகன் எலிசூர்.

எண்ணாகமம் 1:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் மகன் செலூமியேல்.

எண்ணாகமம் 1:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் மகன் நகசோன்.

எண்ணாகமம் 1:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் மகன் நெதனெயேல்.

எண்ணாகமம் 1:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் மகன் எலியாப்.

எண்ணாகமம் 1:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யோசேப்பின் மகன்களாகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் மகன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் மகன் கமாலியேல்.

எண்ணாகமம் 1:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் மகன் அபீதான்.

எண்ணாகமம் 1:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் மகன் அகியேசேர்.

எண்ணாகமம் 1:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் மகன் பாகியேல்.

எண்ணாகமம் 1:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
காத் கோத்திரத்தில் தேகுவேலின் மகன் எலியாசாப்.

எண்ணாகமம் 1:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நப்தலி கோத்திரத்தில் ஏனானின் மகன் அகீரா.

எண்ணாகமம் 1:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் முன்னோர்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களுமாக இருப்பவர்கள் என்றார்.

எண்ணாகமம் 1:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்படியே மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதர்களைக் கூட்டிக்கொண்டு,

எண்ணாகமம் 1:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லோரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள்தங்கள் குடும்பத்தின்படியும், முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், பெயர் கணக்கின்படியும், இருபது வயதுள்ளவர்கள்முதல் தலைதலையாகத் தங்களுடைய வம்சாவளியைத் தெரிவித்தார்கள்.

எண்ணாகமம் 1:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இப்படிக் யெகோவா கட்டளையிட்டபடியே, மோசே அவர்களை சீனாய் வனாந்திரத்தில் எண்ணிப்பார்த்தான்.

எண்ணாகமம் 1:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இஸ்ரவேலின் மூத்தமகனாகிய ரூபன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,

எண்ணாகமம் 1:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 46,500 பேர்.

எண்ணாகமம் 1:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சிமியோன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,

எண்ணாகமம் 1:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 59,300 பேர்.

எண்ணாகமம் 1:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
காத் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

எண்ணாகமம் 1:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 45,650 பேர்.

எண்ணாகமம் 1:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யூதா சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

எண்ணாகமம் 1:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 74,600 பேர்.

எண்ணாகமம் 1:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இசக்கார் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

எண்ணாகமம் 1:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 54,400 பேர்.

எண்ணாகமம் 1:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செபுலோன் சந்ததியாருடைய புறப்படக்கூடிய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

எண்ணாகமம் 1:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 57,400 பேர்.

எண்ணாகமம் 1:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யோசேப்பின் மகன்களில் எப்பிராயீம் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

எண்ணாகமம் 1:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 40,500 பேர்.

எண்ணாகமம் 1:34 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனாசே சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

எண்ணாகமம் 1:35 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 32,200 பேர்.

எண்ணாகமம் 1:36 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பென்யமீன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

எண்ணாகமம் 1:37 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 35,400 பேர்.

எண்ணாகமம் 1:38 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தாண் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

எண்ணாகமம் 1:39 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 62,700 பேர்.

எண்ணாகமம் 1:40 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆசேர் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

எண்ணாகமம் 1:41 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 41,500 பேர்.

எண்ணாகமம் 1:42 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நப்தலி சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

எண்ணாகமம் 1:43 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 53,400 பேர்.

எண்ணாகமம் 1:44 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய கோத்திரங்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்திற்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்.

எண்ணாகமம் 1:45 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இஸ்ரவேல் பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்களாகிய எண்ணப்பட்ட நபர்கள் எல்லோரும்,

எண்ணாகமம் 1:46 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
6,03,550 பேராயிருந்தார்கள்.

எண்ணாகமம் 1:47 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
லேவியர்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடன் எண்ணப்படவில்லை.

எண்ணாகமம் 1:48 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா மோசேயை நோக்கி:

எண்ணாகமம் 1:49 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
“நீ லேவி கோத்திரத்தாரை மட்டும் எண்ணாமலும், இஸ்ரவேல் மக்களுக்குள்ளே அவர்களுடைய தொகையை சேர்க்காமலும்,

எண்ணாகமம் 1:50 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
லேவியர்களைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய எல்லா பணிப்பொருட்களுக்கும், அதிலுள்ள அனைத்து பொருள்களுக்கும் பொறுப்பாளர்களாக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் எல்லா பணிப்பொருட்களையும் சுமக்க வேண்டும்; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிடவேண்டும்.

எண்ணாகமம் 1:51 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சாட்சியின் வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர்கள் அதை இறக்கிவைத்து, அது நிறுவப்படும்போது, லேவியர்கள் அதை எடுத்து நிறுத்தவேண்டும்; அந்நியன் அதற்கு அருகில் வந்தால் கொலை செய்யப்படவேண்டும்.

எண்ணாகமம் 1:52 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இஸ்ரவேல் மக்கள் தங்கள் தங்கள் முகாமோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடவேண்டும்.

எண்ணாகமம் 1:53 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இஸ்ரவேல் மக்களாகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடி லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிட்டு, லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.

எண்ணாகமம் 1:54 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Numbers 1 (ASV) »
King James Version (KJV)
Numbers 1 (KJV) »
GOD’S WORD® (GW)
Numbers 1 (GW) »
Berean Bible (BSB)
Numbers 1 (BSB) »
World English Bible (WEB)
Numbers 1 (WEB) »
French Bible (LSG)
Nombres 1 (LSG) »
German Bible (LUTH1912)
Numeri 1 (LUTH1912) »
Hindi Bible (HINIRV)
गिनती 1 (HINIRV) »
Punjabi Bible (PANIRV)
ਗਿਣਤੀ 1 (PANIRV) »
Bengali Bible (BENIRV)
গননা 1 (BENIRV) »
Marathi Bible (MARIRV)
गणना 1 (MARIRV) »
Gujarati Bible (GUJIRV)
ગણના 1 (GUJIRV) »
Hebrew Bible (HEB)
במדבר 1 (HEB) »
Portuguese Bible (BSL)
Números 1 (BSL) »
Vietnamese Bible (VIE)
Dân Số 1 (VIE) »
Spanish Bible (RVA)
Números 1 (RVA) »
Italian Bible (RIV)
Numeri 1 (RIV) »
Chinese Simplified (CUVS)
民 数 记 1 (CUVS) »
Chinese Traditional (CUVT)
民 數 記 1 (CUVT) »
Albanian Bible (ALB)
Numrat 1 (ALB) »
Swedish Bible (SV1917)
4 Mosebok 1 (SV1917) »
Russian Bible (RUSV)
Числа 1 (RUSV) »
Ukrainian Bible (UKR)
Числа 1 (UKR) »
Hungarian Bible (KAR)
4 Mózes 1 (KAR) »
Bulgarian Bible (BULG)
Числа 1 (BULG) »
Japanese Bible (JPN)
民数記 1 (JPN) »
Norwegian Bible (NORSK)
4 Mosebok 1 (NORSK) »

எண்ணாகமம் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List