2 சாமுவேல் Chapter 23 TAMIRV Bible Verse Images

2 சாமுவேல் 23 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share 2 சாமுவேல் 23 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


2 சாமுவேல் 23:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தாவீதின் கடைசி வார்த்தைகள்: “மேன்மையாக உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இனிமையாகப் பாடின ஈசாயின் மகனான தாவீது என்னும் மனிதன் சொல்லுகிறது என்னவென்றால்;

2 சாமுவேல் 23:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவுடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.

2 சாமுவேல் 23:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபதியாக மனிதர்களை ஆட்சி செய்து, தெய்வபயத்தோடு ஆளுகிறவர் இருப்பார்.

2 சாமுவேல் 23:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் காலையில் மேகம் இல்லாமல் உதித்து, மழைக்குப்பின்பு தன்னுடைய வெளிச்சத்தினால் புல்லை பூமியிலிருந்து முளைக்கச்செய்கிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.

2 சாமுவேல் 23:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என்னுடைய வீடு தேவனிடம் இப்படி இருக்காதோ? அனைத்தும் தீர்மானித்திருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா இரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் பெருகச்செய்யாமல் இருப்பாரோ?

2 சாமுவேல் 23:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தீயவர்கள் அனைவரும், கையினால் பிடிக்கப்படமுடியாததாக எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள்.

2 சாமுவேல் 23:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவைகளை ஒருவன் தொடப்போனால், இரும்பாலான ஆயுதத்தையும் ஈட்டிப்பிடியையும் இறுகப் பிடித்துக்கொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்திலேயே அக்கினியால் முழுவதும் சுட்டெரிக்கப்படும்” என்றான்.

2 சாமுவேல் 23:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தாவீதுக்கு இருந்த பலசாலிகளின் பெயர்கள்: தக்கெமோனியின் மகனான யோசேப்பாசெபெத் என்பவன் இராணுவ அதிகாரிகளின் தலைவன்; இவன் 800 பேரை ஒன்றாக வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரைச்சேர்த்தவன்.

2 சாமுவேல் 23:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இவனுக்கு இரண்டாவது, அகோயின் மகனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர்கள் யுத்தத்திற்குக் கூடின இடத்திலே இஸ்ரவேல் மனிதர்கள் போகும்போது, தாவீதோடு இருந்து பெலிஸ்தர்களை சபித்த மூன்று பலசாலிகளில் ஒருவனாக இருந்தான்.

2 சாமுவேல் 23:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இவன் எழுந்து தன்னுடைய கை சோர்ந்து, தன்னுடைய கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளும்வரை பெலிஸ்தர்களை வெட்டினான்; அன்றையதினம் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்; மக்கள் கொள்ளையிடுவதற்குமட்டும் அவனுக்குப் பின்சென்றார்கள்.

2 சாமுவேல் 23:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் மகனான சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயிறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர்கள் ஏராளமாகக் கூடி, மக்கள் பெலிஸ்தர்களைக் கண்டு ஓடுகிறபோது,

2 சாமுவேல் 23:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தர்களைக் கொன்றுபோட்டான்; அதனால் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்.

2 சாமுவேல் 23:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்று பேர்களும் அறுவடையின் நாளில் அதுல்லாம் கெபியிலே தாவீதிடம் போயிருந்தார்கள்; பெலிஸ்தர்களின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே முகாமிட்டபோது,

2 சாமுவேல் 23:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தாவீது பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தர்களின் முகாம் பெத்லெகேமிலே இருந்தது.

2 சாமுவேல் 23:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தாவீது பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆசைகொண்டு: என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.

2 சாமுவேல் 23:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்பொழுது இந்த மூன்று பெலசாலிகளும் பெலிஸ்தர்களின் முகாமில் துணிந்து புகுந்துபோய், பெத்லெகேமின் நுழைவுவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதிடம் கொண்டு வந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனம் இல்லாமல் அதைக் யெகோவாவெக்கென்று ஊற்றிப்போட்டு:

2 சாமுவேல் 23:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவே, தங்கள் உயிரை பொருட்டாக எண்ணாமல் போய்வந்த அந்த மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாக இருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனம் இல்லாமலிருந்தான்; இப்படி இந்த மூன்று பெலசாலிகளும் செய்தார்கள்.

2 சாமுவேல் 23:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யோவாபின் சகோதரனும் செருயாவின் மகனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் முதன்மையானவன்; அவன் தன்னுடைய ஈட்டியை ஓங்கி 300 பேரைக் கொன்றதால், இந்த மூன்றுபேர்களில் பெயர்பெற்றவனானான்.

2 சாமுவேல் 23:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாக இருந்ததால் அல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கு அவன் சமமானவன் அல்ல.

2 சாமுவேல் 23:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பலசாலியான யோய்தாவின் மகனும் கப்செயேல் ஊரைச்சேர்ந்தவனுமான பெனாயாவும் செயல்களில் வல்லவனாக இருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைக்காலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.

2 சாமுவேல் 23:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவன் பயங்கர உயரமுள்ள ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பிடுங்கி, அவன் ஈட்டியாலே அவனைக் கொன்றுபோட்டான்.

2 சாமுவேல் 23:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்தபடியால், மூன்று பலசாலிகளுக்குள்ளே புகழ்பெற்றவனாக இருந்தான்.

2 சாமுவேல் 23:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
30 பேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான்.

2 சாமுவேல் 23:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற 30 பேர்களில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,

2 சாமுவேல் 23:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆரோதியனான சம்மா, ஆரோதியனான எலிக்கா,

2 சாமுவேல் 23:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பல்தியனான ஏலெஸ், இக்கேசின் மகனான ஈரா என்னும் தெக்கோவியன்.

2 சாமுவேல் 23:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆனதோத்தியனான அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,

2 சாமுவேல் 23:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி,

2 சாமுவேல் 23:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பானாவின் மகனான ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் வம்சத்தார்களின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி,

2 சாமுவேல் 23:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பிரத்தோனியனான பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானான ஈத்தாயி,

2 சாமுவேல் 23:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனான அஸ்மாவேத்,

2 சாமுவேல் 23:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சால்போனியனான ஏலியாபா, யாசேனின் மகன்களில் யோனத்தான் என்பவன்.

2 சாமுவேல் 23:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆராரியனான சம்மா, சாராரின் மகனான அகியாம் என்னும் ஆராரியன்,

2 சாமுவேல் 23:34 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மாகாத்தியனின் மகனான அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனான அகித்தோப்பேலின் மகன் எலியாம் என்பவன்.

2 சாமுவேல் 23:35 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கர்மேலியனான எஸ்ராயி, அர்பியனான பாராயி,

2 சாமுவேல் 23:36 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சோபா ஊரைச்சேர்ந்த நாத்தானின் மகன் ஈகால், காத்தியனான பானி,

2 சாமுவேல் 23:37 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனான யோவாபின் ஆயுதம் ஏந்திய பெரோத்தியனான நகராய்,

2 சாமுவேல் 23:38 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இத்ரியனான ஈரா, இத்ரியனான காரேப்,

2 சாமுவேல் 23:39 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏத்தியனான உரியா என்பவர்களே; ஆக 37 பேர்.

Available Bible Translations

American Standard Version (ASV)
2 Samuel 23 (ASV) »
King James Version (KJV)
2 Samuel 23 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Samuel 23 (GW) »
Berean Bible (BSB)
2 Samuel 23 (BSB) »
World English Bible (WEB)
2 Samuel 23 (WEB) »
French Bible (LSG)
2 Samuel 23 (LSG) »
German Bible (LUTH1912)
2 Samuel 23 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
2 ਸਮੂਏਲ 23 (PANIRV) »
Gujarati Bible (GUJIRV)
2 શમુએલ 23 (GUJIRV) »
Hebrew Bible (HEB)
שמואל ב 23 (HEB) »
Portuguese Bible (BSL)
2 Samuel 23 (BSL) »
Vietnamese Bible (VIE)
2 Sa-mu-ên 23 (VIE) »
Spanish Bible (RVA)
2 Samuel 23 (RVA) »
Italian Bible (RIV)
2 Samuele 23 (RIV) »
Chinese Simplified (CUVS)
撒 母 耳 记 下 23 (CUVS) »
Chinese Traditional (CUVT)
撒 母 耳 記 下 23 (CUVT) »
Albanian Bible (ALB)
2 Samuelit 23 (ALB) »
Swedish Bible (SV1917)
2 Samuelsboken 23 (SV1917) »
Russian Bible (RUSV)
2 Царств 23 (RUSV) »
Hungarian Bible (KAR)
2 Sámuel 23 (KAR) »
Bulgarian Bible (BULG)
2 Царе 23 (BULG) »
Norwegian Bible (NORSK)
2 Samuel 23 (NORSK) »

2 சாமுவேல் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List