புலம்பல் Chapter 3 TAMIRV Bible Verse Images

புலம்பல் 3 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share புலம்பல் 3 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


புலம்பல் 3:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆண்டவருடைய கோபத்தின் பிரம்பினால் ஏற்பட்ட சிறுமையைக் கண்ட மனிதன் நான்.

புலம்பல் 3:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.

புலம்பல் 3:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே தினமும் திருப்பினார்.

புலம்பல் 3:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என் சதையையும், என் தோலையும் கடினமாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.

புலம்பல் 3:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் எனக்கு விரோதமாக மதிலைக்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டார்.

புலம்பல் 3:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆரம்பகாலத்தில் இறந்தவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கச்செய்தார்.

புலம்பல் 3:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நான் தப்பிப்போகாமலிருக்க என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கை கடினமாக்கினார்.

புலம்பல் 3:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்திற்கு வழியை அடைத்துப்போட்டார்.

புலம்பல் 3:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.

புலம்பல் 3:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் எனக்காகப் பதுங்கியிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.

புலம்பல் 3:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என்னுடைய வழிகளை அகற்றி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பயனற்றவனாக்கிவிட்டார்.

புலம்பல் 3:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.

புலம்பல் 3:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தம்முடைய அம்புகளை வைக்கும் பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார்.

புலம்பல் 3:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நான் என் மக்கள் அனைவருக்கும் பரியாசமும், தினமும் அவர்களுடைய கின்னரப் பாடலுமானேன்.

புலம்பல் 3:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறுப்படையச்செய்தார்.

புலம்பல் 3:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளச்செய்தார்.

புலம்பல் 3:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.

புலம்பல் 3:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என் பெலனும், நான் யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன்.

புலம்பல் 3:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.

புலம்பல் 3:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது.

புலம்பல் 3:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன்.

புலம்பல் 3:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

புலம்பல் 3:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

புலம்பல் 3:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.

புலம்பல் 3:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் யெகோவா நல்லவர்.

புலம்பல் 3:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.

புலம்பல் 3:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன் இளவயதில் நுகத்தைச் சுமக்கிறது மனிதனுக்கு நல்லது.

புலம்பல் 3:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருப்பானாக.

புலம்பல் 3:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாய் மண்ணில்படும்படி குப்புறவிழுவானாக.

புலம்பல் 3:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக.

புலம்பல் 3:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.

புலம்பல் 3:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் வருத்தப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி மனமிரங்குவார்.

புலம்பல் 3:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் மனப்பூர்வமாக மனுமக்களைச் சிறுமையாக்கி வருத்தப்படுத்துகிறதில்லை.

புலம்பல் 3:34 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் அனைவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,

புலம்பல் 3:35 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னதமான தேவனின் சமுகத்தில் மனிதர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,

புலம்பல் 3:36 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?

புலம்பல் 3:37 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆண்டவர் கட்டளையிடாமல் இருக்கும்போது, காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?

புலம்பல் 3:38 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னதமான தேவனுடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?

புலம்பல் 3:39 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உயிருள்ள மனிதன் முறையிடுவானேன்? அவன் தன்னுடைய பாவத்திற்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?

புலம்பல் 3:40 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, யெகோவாவிடத்தில் திரும்பக்கடவோம்.

புலம்பல் 3:41 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுப்போமாக.

புலம்பல் 3:42 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்; ஆகையால் தேவரீர் மன்னிக்காமல் இருந்தீர்.

புலம்பல் 3:43 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.

புலம்பல் 3:44 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஜெபம் உள்ளே நுழையமுடியாதபடி உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.

புலம்பல் 3:45 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மக்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.

புலம்பல் 3:46 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எங்கள் பகைவர்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகத் தங்கள் வாயைத் திறந்தார்கள்.

புலம்பல் 3:47 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பயமும், படுகுழியும், பயனற்றநிலையும், அழிவும் எங்களுக்கு நேரிட்டது.

புலம்பல் 3:48 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மகளாகிய என் மக்கள் அடைந்த கேட்டினால் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.

புலம்பல் 3:49 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை,

புலம்பல் 3:50 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது.

புலம்பல் 3:51 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என் பட்டணத்தின் பெண்கள் அனைவரினிமித்தம், என் கண் என் ஆத்துமாவுக்கு வேதனையுண்டாக்குகிறது.

புலம்பல் 3:52 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள்.

புலம்பல் 3:53 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லைவைத்தார்கள்.

புலம்பல் 3:54 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன்.

புலம்பல் 3:55 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மகா ஆழமான குழியிலிருந்து, யெகோவாவே, உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன்.

புலம்பல் 3:56 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.

புலம்பல் 3:57 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் கேட்டு: பயப்படாதே என்றீர்.

புலம்பல் 3:58 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர்.

புலம்பல் 3:59 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும்.

புலம்பல் 3:60 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களுடைய எல்லா விரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.

புலம்பல் 3:61 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும்,

புலம்பல் 3:62 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எனக்கு விரோதமாக எழும்பினவர்களின் வாய்ச்சொற்களையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாக யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.

புலம்பல் 3:63 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.

புலம்பல் 3:64 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவே, அவர்களுடைய கைகள் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் கொடுப்பீர்.

புலம்பல் 3:65 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.

புலம்பல் 3:66 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கோபமாக அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவுடைய வானங்களின் கீழே அவர்கள் இல்லாதபடி அவர்களை அழித்துவிடுவீர்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Lamentations 3 (ASV) »
King James Version (KJV)
Lamentations 3 (KJV) »
GOD’S WORD® (GW)
Lamentations 3 (GW) »
Berean Bible (BSB)
Lamentations 3 (BSB) »
World English Bible (WEB)
Lamentations 3 (WEB) »
French Bible (LSG)
Lamentations 3 (LSG) »
German Bible (LUTH1912)
Klagelieder 3 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਵਿਰਲਾਪ 3 (PANIRV) »
Bengali Bible (BENIRV)
বিলাপ 3 (BENIRV) »
Hebrew Bible (HEB)
איכה 3 (HEB) »
Portuguese Bible (BSL)
Lamentações 3 (BSL) »
Vietnamese Bible (VIE)
Ai Ca 3 (VIE) »
Spanish Bible (RVA)
Lamentaciones 3 (RVA) »
Italian Bible (RIV)
Lamentazioni 3 (RIV) »
Chinese Simplified (CUVS)
耶 利 米 哀 歌 3 (CUVS) »
Chinese Traditional (CUVT)
耶 利 米 哀 歌 3 (CUVT) »
Albanian Bible (ALB)
Vajtimet 3 (ALB) »
Swedish Bible (SV1917)
Klagovisorna 3 (SV1917) »
Hungarian Bible (KAR)
Jeremiás siralmai 3 (KAR) »
Japanese Bible (JPN)
哀歌 3 (JPN) »
Norwegian Bible (NORSK)
Klagesangene 3 (NORSK) »

புலம்பல் (TAMIRV) Chapter Selection

1 2 3 4 5

TAMIRV Book Selection List