சங்கீதங்கள் Chapter 135 TAMIRV Bible Verse Images

சங்கீதங்கள் 135 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share சங்கீதங்கள் 135 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


சங்கீதங்கள் 135:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அல்லேலூயா, யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்; யெகோவாவின் ஊழியக்காரர்களே, துதியுங்கள்.

சங்கீதங்கள் 135:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவுடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயமுற்றங்களிலும் நிற்கிறவர்களே, யெகோவாவை துதியுங்கள்.

சங்கீதங்கள் 135:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா நல்லவர்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; அது இன்பமானது.

சங்கீதங்கள் 135:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.

சங்கீதங்கள் 135:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.

சங்கீதங்கள் 135:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், யெகோவா தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார்.

சங்கீதங்கள் 135:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து புறப்படச்செய்கிறார்.

சங்கீதங்கள் 135:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.

சங்கீதங்கள் 135:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்கள் மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.

சங்கீதங்கள் 135:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று;

சங்கீதங்கள் 135:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் எல்லா ராஜ்ஜியங்களையும் அழித்து,

சங்கீதங்கள் 135:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.

சங்கீதங்கள் 135:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது; யெகோவாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.

சங்கீதங்கள் 135:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா தம்முடைய மக்களின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார்.

சங்கீதங்கள் 135:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அஞ்ஞானிகளுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.

சங்கீதங்கள் 135:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

சங்கீதங்கள் 135:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.

சங்கீதங்கள் 135:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள்.

சங்கீதங்கள் 135:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இஸ்ரவேல் குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்.

சங்கீதங்கள் 135:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
லேவி குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; யெகோவாவுக்குப் பயந்தவர்களே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்.

சங்கீதங்கள் 135:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எருசலேமில் குடியிருக்கிற யெகோவாவுக்கு சீயோனிலிருந்து நன்றிஉண்டாகட்டும். அல்லேலூயா.

Available Bible Translations

American Standard Version (ASV)
Psalms 135 (ASV) »
King James Version (KJV)
Psalms 135 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 135 (GW) »
Berean Bible (BSB)
Psalms 135 (BSB) »
World English Bible (WEB)
Psalms 135 (WEB) »
French Bible (LSG)
Psaumes 135 (LSG) »
German Bible (LUTH1912)
Psalm 135 (LUTH1912) »
Punjabi Bible (PANIRV)
ਜ਼ਬੂਰ 135 (PANIRV) »
Hebrew Bible (HEB)
תהלים 135 (HEB) »
Portuguese Bible (BSL)
Salmos 135 (BSL) »
Vietnamese Bible (VIE)
Thánh Thi 135 (VIE) »
Spanish Bible (RVA)
Salmos 135 (RVA) »
Italian Bible (RIV)
Salmi 135 (RIV) »
Chinese Simplified (CUVS)
诗 篇 135 (CUVS) »
Chinese Traditional (CUVT)
詩 篇 135 (CUVT) »
Albanian Bible (ALB)
Psalmet 135 (ALB) »
Swedish Bible (SV1917)
Psaltaren 135 (SV1917) »
Ukrainian Bible (UKR)
Псалми 135 (UKR) »
Hungarian Bible (KAR)
Zsoltárok 135 (KAR) »
Bulgarian Bible (BULG)
Псалми 135 (BULG) »
Japanese Bible (JPN)
詩篇 135 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salmene 135 (NORSK) »

TAMIRV Book Selection List