நீதிமொழிகள் Chapter 12 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 12 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 12 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 12:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.

நீதிமொழிகள் 12:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்; கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார்.

நீதிமொழிகள் 12:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.

நீதிமொழிகள் 12:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள்.

நீதிமொழிகள் 12:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள்.

நீதிமொழிகள் 12:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.

நீதிமொழிகள் 12:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.

நீதிமொழிகள் 12:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.

நீதிமொழிகள் 12:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உணவில்லாதவனாக இருந்தும், தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட, மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.

நீதிமொழிகள் 12:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே.

நீதிமொழிகள் 12:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.

நீதிமொழிகள் 12:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.

நீதிமொழிகள் 12:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான்.

நீதிமொழிகள் 12:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.

நீதிமொழிகள் 12:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.

நீதிமொழிகள் 12:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; அவமானத்தை மூடுகிறவனோ விவேகி.

நீதிமொழிகள் 12:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.

நீதிமொழிகள் 12:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து.

நீதிமொழிகள் 12:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்;

நீதிமொழிகள் 12:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது; சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம்.

நீதிமொழிகள் 12:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள்.

நீதிமொழிகள் 12:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.

நீதிமொழிகள் 12:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும்.

நீதிமொழிகள் 12:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான்.

நீதிமொழிகள் 12:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.

நீதிமொழிகள் 12:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்; துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.

நீதிமொழிகள் 12:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.

நீதிமொழிகள் 12:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.

Available Bible Translations

American Standard Version (ASV)
Proverbs 12 (ASV) »
King James Version (KJV)
Proverbs 12 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 12 (GW) »
Berean Bible (BSB)
Proverbs 12 (BSB) »
World English Bible (WEB)
Proverbs 12 (WEB) »
French Bible (LSG)
Proverbes 12 (LSG) »
German Bible (LUTH1912)
Sprüche 12 (LUTH1912) »
Telugu Bible (TELIRV)
సామెత 12 (TELIRV) »
Hebrew Bible (HEB)
משלי 12 (HEB) »
Portuguese Bible (BSL)
Provérbios 12 (BSL) »
Vietnamese Bible (VIE)
Châm Ngôn 12 (VIE) »
Spanish Bible (RVA)
Proverbios 12 (RVA) »
Italian Bible (RIV)
Proverbi 12 (RIV) »
Chinese Simplified (CUVS)
箴 言 12 (CUVS) »
Chinese Traditional (CUVT)
箴 言 12 (CUVT) »
Albanian Bible (ALB)
Fjalët e urta 12 (ALB) »
Swedish Bible (SV1917)
Ordspråksboken 12 (SV1917) »
Russian Bible (RUSV)
Притчи 12 (RUSV) »
Hungarian Bible (KAR)
Példabeszédek 12 (KAR) »
Bulgarian Bible (BULG)
Притчи 12 (BULG) »
Japanese Bible (JPN)
箴言 12 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salomos Ordspråk 12 (NORSK) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List