நீதிமொழிகள் Chapter 28 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 28 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 28 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 28:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஒருவனும் பின்தொடராமல் இருந்தும் துன்மார்க்கர்கள் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாக இருக்கிறார்கள்.

நீதிமொழிகள் 28:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தேசத்தின் பாவத்தினால் அதின் அதிகாரிகள் அநேகராக இருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனிதனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.

நீதிமொழிகள் 28:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் உணவு விளையாதபடி வெள்ளமாக அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போல இருக்கிறான்.

நீதிமொழிகள் 28:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வேதப்பிரமாணத்தைவிட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கர்களைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடு போராடுகிறார்கள்.

நீதிமொழிகள் 28:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கர்கள் நியாயத்தை அறியார்கள்; யெகோவாவை தேடுகிறவர்களோ அனைத்தையும் அறிவார்கள்.

நீதிமொழிகள் 28:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும், நேர்மையாக நடக்கிற தரித்திரன் அவனைவிட சிறப்பானவன்.

நீதிமொழிகள் 28:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்; உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான்.

நீதிமொழிகள் 28:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன்னுடைய சொத்தைப் பெருகச்செய்கிறவன், தரித்திரர்கள்மேல் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.

நீதிமொழிகள் 28:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.

நீதிமொழிகள் 28:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.

நீதிமொழிகள் 28:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.

நீதிமொழிகள் 28:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர்கள் எழும்பும்போதோ மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்.

நீதிமொழிகள் 28:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம்பெறுவான்.

நீதிமொழிகள் 28:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.

நீதிமொழிகள் 28:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏழை மக்களை ஆளும் துன்மார்க்க அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்திற்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாக இருக்கிறான்.

நீதிமொழிகள் 28:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தலைவன் புத்தியீனனாக இருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.

நீதிமொழிகள் 28:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிய ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.

நீதிமொழிகள் 28:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உத்தமனாக நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.

நீதிமொழிகள் 28:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவால் திருப்தியாவான்; வீணர்களைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.

நீதிமொழிகள் 28:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; செல்வந்தனாகிறதற்கு அவசரப்படுகிறவனோ ஆக்கினைக்குத் தப்பமாட்டான்.

நீதிமொழிகள் 28:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பாரபட்சம் நல்லதல்ல, பாரபட்சமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்திற்காக அநியாயம் செய்வான்.

நீதிமொழிகள் 28:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பொறாமைக்காரன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாமல் இருக்கிறான்.

நீதிமொழிகள் 28:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட, கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.

நீதிமொழிகள் 28:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன்.

நீதிமொழிகள் 28:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்; யெகோவாவை நம்புகிறவனோ செழிப்பான்.

நீதிமொழிகள் 28:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாக நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

நீதிமொழிகள் 28:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தரித்திரர்களுக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையமாட்டான்; தன்னுடைய கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.

நீதிமொழிகள் 28:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கர்கள் எழும்பும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Proverbs 28 (ASV) »
King James Version (KJV)
Proverbs 28 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 28 (GW) »
Berean Bible (BSB)
Proverbs 28 (BSB) »
World English Bible (WEB)
Proverbs 28 (WEB) »
French Bible (LSG)
Proverbes 28 (LSG) »
German Bible (LUTH1912)
Sprüche 28 (LUTH1912) »
Telugu Bible (TELIRV)
సామెత 28 (TELIRV) »
Hebrew Bible (HEB)
משלי 28 (HEB) »
Portuguese Bible (BSL)
Provérbios 28 (BSL) »
Vietnamese Bible (VIE)
Châm Ngôn 28 (VIE) »
Spanish Bible (RVA)
Proverbios 28 (RVA) »
Italian Bible (RIV)
Proverbi 28 (RIV) »
Chinese Simplified (CUVS)
箴 言 28 (CUVS) »
Chinese Traditional (CUVT)
箴 言 28 (CUVT) »
Albanian Bible (ALB)
Fjalët e urta 28 (ALB) »
Swedish Bible (SV1917)
Ordspråksboken 28 (SV1917) »
Russian Bible (RUSV)
Притчи 28 (RUSV) »
Hungarian Bible (KAR)
Példabeszédek 28 (KAR) »
Bulgarian Bible (BULG)
Притчи 28 (BULG) »
Japanese Bible (JPN)
箴言 28 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salomos Ordspråk 28 (NORSK) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List