நீதிமொழிகள் Chapter 5 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 5 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 5 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 5:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து, என்னுடைய புத்திக்கு உன்னுடைய செவியைச் சாய்;

நீதிமொழிகள் 5:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன்னுடைய உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.

நீதிமொழிகள் 5:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும்.

நீதிமொழிகள் 5:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம்போல் கூர்மையுமாக இருக்கும்.

நீதிமொழிகள் 5:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.

நீதிமொழிகள் 5:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது.

நீதிமொழிகள் 5:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள்.

நீதிமொழிகள் 5:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே.

நீதிமொழிகள் 5:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும், உன்னுடைய ஆயுளின் காலத்தைக் கொடூரமானவர்களுக்கும் கொடுத்துவிடுவாய்.

நீதிமொழிகள் 5:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன்னுடைய உழைப்பின் பலன் மற்றவர்களுடைய வீட்டில் சேரும்.

நீதிமொழிகள் 5:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:

நீதிமொழிகள் 5:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் செய்ததே!

நீதிமொழிகள் 5:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும், எனக்கு உபதேசம்செய்தவர்களுக்கு செவிகொடுக்காமலும் போனேனே!

நீதிமொழிகள் 5:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று முறையிடுவாய்.

நீதிமொழிகள் 5:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி.

நீதிமொழிகள் 5:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும் உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.

நீதிமொழிகள் 5:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல், உனக்கே உரியவைகளாக இருப்பதாக.

நீதிமொழிகள் 5:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு.

நீதிமொழிகள் 5:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும், அழகான வரையாடும்போல இருப்பாளாக; அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு.

நீதிமொழிகள் 5:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன?

நீதிமொழிகள் 5:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.

நீதிமொழிகள் 5:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.

நீதிமொழிகள் 5:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து, தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Proverbs 5 (ASV) »
King James Version (KJV)
Proverbs 5 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 5 (GW) »
Berean Bible (BSB)
Proverbs 5 (BSB) »
World English Bible (WEB)
Proverbs 5 (WEB) »
French Bible (LSG)
Proverbes 5 (LSG) »
German Bible (LUTH1912)
Sprüche 5 (LUTH1912) »
Telugu Bible (TELIRV)
సామెత 5 (TELIRV) »
Hebrew Bible (HEB)
משלי 5 (HEB) »
Portuguese Bible (BSL)
Provérbios 5 (BSL) »
Vietnamese Bible (VIE)
Châm Ngôn 5 (VIE) »
Spanish Bible (RVA)
Proverbios 5 (RVA) »
Italian Bible (RIV)
Proverbi 5 (RIV) »
Chinese Simplified (CUVS)
箴 言 5 (CUVS) »
Chinese Traditional (CUVT)
箴 言 5 (CUVT) »
Albanian Bible (ALB)
Fjalët e urta 5 (ALB) »
Swedish Bible (SV1917)
Ordspråksboken 5 (SV1917) »
Russian Bible (RUSV)
Притчи 5 (RUSV) »
Hungarian Bible (KAR)
Példabeszédek 5 (KAR) »
Bulgarian Bible (BULG)
Притчи 5 (BULG) »
Japanese Bible (JPN)
箴言 5 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salomos Ordspråk 5 (NORSK) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List