நீதிமொழிகள் Chapter 21 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 21 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 21 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 21:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ராஜாவின் இருதயம் யெகோவாவின் கையில் நீரூற்றைப்போல இருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.

நீதிமொழிகள் 21:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுடைய வழியெல்லாம் அவனுடைய பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; யெகோவாவோ இருதயங்களை நிறுத்திப்பார்க்கிறார்.

நீதிமொழிகள் 21:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பலியிடுவதைவிட, நீதியும் நியாயமும் செய்வதே யெகோவாவுக்குப் பிரியம்.

நீதிமொழிகள் 21:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர்கள் போடும் வெளிச்சம் பாவமே.

நீதிமொழிகள் 21:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்திற்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்திற்கும் ஏதுவாகும்.

நீதிமொழிகள் 21:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போல இருக்கும்.

நீதிமொழிகள் 21:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கர்கள் நியாயம்செய்ய மனமில்லாமல் இருக்கிறபடியால், அவர்கள் அழிக்கப்பட்டுபோவார்கள்.

நீதிமொழிகள் 21:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
குற்றமுள்ளவன் தன்னுடைய வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன்னுடைய செயலில் செம்மையானவன்.

நீதிமொழிகள் 21:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.

நீதிமொழிகள் 21:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கனுடைய மனம் தீங்கைச் செய்ய விரும்பும்; அவனுடைய கண்களில் அவனுடைய அயலானுக்கு இரக்கம் கிடையாது.

நீதிமொழிகள் 21:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.

நீதிமொழிகள் 21:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிபரர் துன்மார்க்கர்களுடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கர்களைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.

நீதிமொழிகள் 21:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏழையின் கூக்குரலுக்குத் தன்னுடைய செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.

நீதிமொழிகள் 21:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள லஞ்சம் கோபத்தை ஆற்றும்.

நீதிமொழிகள் 21:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நியாயம்தீர்ப்பது நீதிமானுக்கு சந்தோஷமும், அக்கிரமக்காரர்களுக்கோ அழிவுமாகும்.

நீதிமொழிகள் 21:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
விவேகத்தின் வழியைவிட்டுத் தப்பி நடக்கிற மனிதன் செத்தவர்களின் கூட்டத்தில் தங்குவான்.

நீதிமொழிகள் 21:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை.

நீதிமொழிகள் 21:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமானுக்கு பதிலாக துன்மார்க்கனும், செம்மையானவனுக்கு பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.

நீதிமொழிகள் 21:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.

நீதிமொழிகள் 21:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வேண்டிய செல்வமும் எண்ணெயும் ஞானவானுடைய வீட்டில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.

நீதிமொழிகள் 21:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதியையும் தயவையும் பின்பற்றுகிறவன் நல்வாழ்வையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.

நீதிமொழிகள் 21:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின மதில்சுவரை இடித்துப்போடுவான்.

நீதிமொழிகள் 21:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய வாயையும் தன்னுடைய நாவையும் காக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.

நீதிமொழிகள் 21:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அகங்காரமும் அகந்தையும் உள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்று பெயர், அவன் அகந்தையான கோபத்தோடு நடக்கிறான்.

நீதிமொழிகள் 21:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால், அவனுடைய ஆசை அவனைக் கொல்லும்.

நீதிமொழிகள் 21:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவன் நாள்தோறும் ஆவலுடன் விரும்புகிறான்; நீதிமானோ தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் கொடுப்பான்.

நீதிமொழிகள் 21:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் தீயசிந்தையோடு செலுத்தினாலோ எத்தனை அதிகமாக அருவருக்கப்படும்.

நீதிமொழிகள் 21:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசக்கூடியவனாவான்.

நீதிமொழிகள் 21:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கன் தன்னுடைய முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன்னுடைய வழியை நேர்ப்படுத்துகிறான்.

நீதிமொழிகள் 21:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவுக்கு விரோதமான ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை.

நீதிமொழிகள் 21:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; வெற்றியோ யெகோவாவால் வரும்.

Available Bible Translations

American Standard Version
Proverbs 21 (ASV) »
King James Version
Proverbs 21 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 21 (GW) »
World English Bible
Proverbs 21 (WEB) »
Louis Segond 1910
Proverbes 21 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 21 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 21 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 21 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 21 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 21 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 21 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 21 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 21 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 21 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 21 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 21 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 21 (RVA) »
La Sacra Bibbia
Proverbi 21 (RIV) »
圣 经 简体中文和合本
箴 言 21 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 21 (CUVT) »
Библия на русском
Притчи 21 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 21 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 21 (KAR) »
Българска Библия
Притчи 21 (BULG) »
聖書 日本語
箴言 21 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 21 (SOM) »
De Heilige Schrift
Spreuken 21 (NLD) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List