நீதிமொழிகள் Chapter 3 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 3 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 3 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 3:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே; உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும்.

நீதிமொழிகள் 3:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், நீண்ட ஆயுளையும், சமாதானத்தையும் பெருகச்செய்யும்.

நீதிமொழிகள் 3:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக; நீ அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டி, அவைகளை உன்னுடைய இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.

நீதிமொழிகள் 3:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய்.

நீதிமொழிகள் 3:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல், உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து,

நீதிமொழிகள் 3:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

நீதிமொழிகள் 3:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; யெகோவாவுக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

நீதிமொழிகள் 3:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும், உன்னுடைய எலும்புகளுக்கு ஊனுமாகும்.

நீதிமொழிகள் 3:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய பொருளாலும், உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து.

நீதிமொழிகள் 3:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்; உன்னுடைய ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும்.

நீதிமொழிகள் 3:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என் மகனே, நீ யெகோவாவுடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.

நீதிமொழிகள் 3:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல, யெகோவாவும் எவனிடத்தில் அன்பாக இருக்கிறாரோ அவனை தண்டிக்கிறார்.

நீதிமொழிகள் 3:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள்.

நீதிமொழிகள் 3:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும், அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது.

நீதிமொழிகள் 3:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது; நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல.

நீதிமொழிகள் 3:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.

நீதிமொழிகள் 3:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.

நீதிமொழிகள் 3:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.

நீதிமொழிகள் 3:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை நிலைநிறுத்தினார்.

நீதிமொழிகள் 3:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது.

நீதிமொழிகள் 3:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என் மகனே, இவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; மெய்ஞானத்தையும் நல்ல ஆலோசனையையும் காத்துக்கொள்.

நீதிமொழிகள் 3:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும், உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும்.

நீதிமொழிகள் 3:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய், உன்னுடைய கால் இடறாது.

நீதிமொழிகள் 3:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்.

நீதிமொழிகள் 3:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
திடீரென வரும் திகிலும், துன்மார்க்கர்களின் பேரழிவும் வரும்போது நீ பயப்படவேண்டாம்.

நீதிமொழிகள் 3:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து, உன்னுடைய கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார்.

நீதிமொழிகள் 3:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே.

நீதிமொழிகள் 3:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.

நீதிமொழிகள் 3:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற உன்னுடைய அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினைக்காதே.

நீதிமொழிகள் 3:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க, காரணமின்றி அவனோடு வழக்காடாதே.

நீதிமொழிகள் 3:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.

நீதிமொழிகள் 3:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடு அவருடைய இரகசியம் இருக்கிறது.

நீதிமொழிகள் 3:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கனுடைய வீட்டில் யெகோவாவின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வீட்டையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.

நீதிமொழிகள் 3:34 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.

நீதிமொழிகள் 3:35 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானவான்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.

Available Bible Translations

American Standard Version
Proverbs 3 (ASV) »
King James Version
Proverbs 3 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 3 (GW) »
World English Bible
Proverbs 3 (WEB) »
Louis Segond 1910
Proverbes 3 (LSG) »
Luther Bibel 1912
Sprüche 3 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 3 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 3 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 3 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 3 (RVA) »
La Sacra Bibbia
Proverbi 3 (RIV) »
圣 经 简体中文和合本
箴 言 3 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 3 (CUVT) »
Библия на русском
Притчи 3 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 3 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 3 (KAR) »
Българска Библия
Притчи 3 (BULG) »
聖書 日本語
箴言 3 (JPN) »
Biblia Takatifu
Mithali 3 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 3 (SOM) »
De Heilige Schrift
Spreuken 3 (NLD) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List