நீதிமொழிகள் Chapter 27 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 27 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 27 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 27:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபேசாதே; ஒரு நாள் பிறப்பிப்பதை அறியமாட்டாயே.

நீதிமொழிகள் 27:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய வாய் அல்ல, மற்றவனே உன்னைப் புகழட்டும்; உன்னுடைய உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.

நீதிமொழிகள் 27:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கல் கனமும், மணல் பாரமுமாக இருக்கும்; மூடனுடைய கோபமோ இந்த இரண்டைவிட பாரமாம்.

நீதிமொழிகள் 27:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்?

நீதிமொழிகள் 27:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மறைவான நேசத்தைவிட வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.

நீதிமொழிகள் 27:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நண்பன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.

நீதிமொழிகள் 27:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான ஆகாரங்களும் தித்திப்பாக இருக்கும்.

நீதிமொழிகள் 27:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன்னுடைய இடத்தைவிட்டு அலைகிற மனிதனும் இருக்கிறான்.

நீதிமொழிகள் 27:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வாசனைத் தைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய நண்பன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.

நீதிமொழிகள் 27:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய நண்பனையும், உன்னுடைய தகப்பனுடைய நண்பனையும் விட்டுவிடாதே; உன்னுடைய ஆபத்துக்காலத்தில் உன்னுடைய சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனைவிட சமீபத்திலுள்ள அயலானே சிறப்பானவன்.

நீதிமொழிகள் 27:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என் மகனே, என்னை சபிக்கிறவனுக்கு நான் உத்திரவு கொடுக்கும்படியாக, நீ ஞானவானாகி, என்னுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.

நீதிமொழிகள் 27:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.

நீதிமொழிகள் 27:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய ஆடையை எடுத்துக்கொள், அந்நிய பெண்ணுக்காக ஈடுவாங்கிக்கொள்.

நீதிமொழிகள் 27:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்த சத்தத்தோடு தன்னுடைய நண்பனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.

நீதிமொழிகள் 27:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான பெண்ணும் சரி.

நீதிமொழிகள் 27:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன்னுடைய வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.

நீதிமொழிகள் 27:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இரும்பை இரும்பு கூர்மையாக்கிடும்; அப்படியே மனிதனும் தன்னுடைய நண்பனைக் கூர்மையாக்குகிறான்.

நீதிமொழிகள் 27:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியை சாப்பிடுவான்; தன்னுடைய எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.

நீதிமொழிகள் 27:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தண்ணீரில் முகத்திற்கு முகம் ஒத்திருப்பதைப்போல, மனிதர்களில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.

நீதிமொழிகள் 27:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை.

நீதிமொழிகள் 27:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனிதனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.

நீதிமொழிகள் 27:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.

நீதிமொழிகள் 27:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய ஆடுகளின் நிலைமையை நன்றாக அறிந்துகொள்; உன்னுடைய மந்தைகளின்மேல் கவனமாக இரு.

நீதிமொழிகள் 27:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செல்வம் என்றைக்கும் நிலைக்காது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?

நீதிமொழிகள் 27:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.

நீதிமொழிகள் 27:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆட்டுக்குட்டிகள் உனக்கு ஆடையையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.

நீதிமொழிகள் 27:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வெள்ளாட்டுப்பால் உன்னுடைய உணவுக்கும், உன் வீட்டாரின் உணவுக்கும் உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானதாக இருக்கும்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Proverbs 27 (ASV) »
King James Version (KJV)
Proverbs 27 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 27 (GW) »
Berean Bible (BSB)
Proverbs 27 (BSB) »
World English Bible (WEB)
Proverbs 27 (WEB) »
French Bible (LSG)
Proverbes 27 (LSG) »
German Bible (LUTH1912)
Sprüche 27 (LUTH1912) »
Telugu Bible (TELIRV)
సామెత 27 (TELIRV) »
Hebrew Bible (HEB)
משלי 27 (HEB) »
Portuguese Bible (BSL)
Provérbios 27 (BSL) »
Vietnamese Bible (VIE)
Châm Ngôn 27 (VIE) »
Spanish Bible (RVA)
Proverbios 27 (RVA) »
Italian Bible (RIV)
Proverbi 27 (RIV) »
Chinese Simplified (CUVS)
箴 言 27 (CUVS) »
Chinese Traditional (CUVT)
箴 言 27 (CUVT) »
Albanian Bible (ALB)
Fjalët e urta 27 (ALB) »
Swedish Bible (SV1917)
Ordspråksboken 27 (SV1917) »
Russian Bible (RUSV)
Притчи 27 (RUSV) »
Hungarian Bible (KAR)
Példabeszédek 27 (KAR) »
Bulgarian Bible (BULG)
Притчи 27 (BULG) »
Japanese Bible (JPN)
箴言 27 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salomos Ordspråk 27 (NORSK) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List