நீதிமொழிகள் Chapter 14 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 14 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 14 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 14:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.

நீதிமொழிகள் 14:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்; தன்னுடைய வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்செய்கிறான்.

நீதிமொழிகள் 14:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.

நீதிமொழிகள் 14:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.

நீதிமொழிகள் 14:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

நீதிமொழிகள் 14:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும்.

நீதிமொழிகள் 14:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய்.

நீதிமொழிகள் 14:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.

நீதிமொழிகள் 14:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயவு உண்டு.

நீதிமொழிகள் 14:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான்.

நீதிமொழிகள் 14:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.

நீதிமொழிகள் 14:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.

நீதிமொழிகள் 14:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.

நீதிமொழிகள் 14:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும், நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.

நீதிமொழிகள் 14:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான்.

நீதிமொழிகள் 14:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான்.

நீதிமொழிகள் 14:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.

நீதிமொழிகள் 14:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.

நீதிமொழிகள் 14:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.

நீதிமொழிகள் 14:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு.

நீதிமொழிகள் 14:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.

நீதிமொழிகள் 14:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு.

நீதிமொழிகள் 14:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும்.

நீதிமொழிகள் 14:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்; மூடர்களின் மதியீனம் மூடத்தனமே.

நீதிமொழிகள் 14:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

நீதிமொழிகள் 14:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவனுடைய பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.

நீதிமொழிகள் 14:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

நீதிமொழிகள் 14:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை; மக்கள்குறைவு தலைவனின் முறிவு.

நீதிமொழிகள் 14:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான்.

நீதிமொழிகள் 14:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு; பொறாமையோ எலும்புருக்கி.

நீதிமொழிகள் 14:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்;

நீதிமொழிகள் 14:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.

நீதிமொழிகள் 14:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.

நீதிமொழிகள் 14:34 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி.

நீதிமொழிகள் 14:35 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்; அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும்.

Available Bible Translations

American Standard Version
Proverbs 14 (ASV) »
King James Version
Proverbs 14 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 14 (GW) »
World English Bible
Proverbs 14 (WEB) »
Louis Segond 1910
Proverbes 14 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 14 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 14 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 14 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 14 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 14 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 14 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 14 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 14 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 14 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 14 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 14 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 14 (RVA) »
La Sacra Bibbia
Proverbi 14 (RIV) »
圣 经 简体中文和合本
箴 言 14 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 14 (CUVT) »
Библия на русском
Притчи 14 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 14 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 14 (KAR) »
Българска Библия
Притчи 14 (BULG) »
聖書 日本語
箴言 14 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 14 (SOM) »
De Heilige Schrift
Spreuken 14 (NLD) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List