நீதிமொழிகள் Chapter 30 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 30 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 30 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 30:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யாக்கேயின் மகனாகிய ஆகூர் என்னும் ஆண்மகன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்ன உபதேச வாக்கியங்கள்:

நீதிமொழிகள் 30:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்; மனிதர்களுக்கேற்ற புத்தி எனக்கு இல்லை.

நீதிமொழிகள் 30:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை.

நீதிமொழிகள் 30:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை துணியிலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் நிறுவியவர் யார்? அவருடைய பெயர் என்ன? அவருடைய மகனுடைய பெயர் என்ன? அதை அறிவாயோ?

நீதிமொழிகள் 30:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.

நீதிமொழிகள் 30:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.

நீதிமொழிகள் 30:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரணமடையும்வரைக்கும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும்.

நீதிமொழிகள் 30:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் செல்வத்தையும் எனக்குக் கொடுக்காமல் இருப்பீராக.

நீதிமொழிகள் 30:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரமடைகிறதினால் திருடி, என்னுடைய தேவனுடைய நாமத்தை வீணாக கெடுக்காதபடிக்கும், என்னுடைய படியை எனக்கு அளந்து எனக்கு உணவளியும்.

நீதிமொழிகள் 30:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றம் சுமத்தாதே; அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய்.

நீதிமொழிகள் 30:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தங்களுடைய தகப்பனைச் சபித்தும், தங்களுடைய தாயை ஆசீர்வதிக்காமலும் இருக்கிற சந்ததியாரும் உண்டு.

நீதிமொழிகள் 30:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும், தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு.

நீதிமொழிகள் 30:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள்.

நீதிமொழிகள் 30:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும் சாப்பிடுவதற்கு வாளுக்கு ஒப்பான பற்களையும் கத்திகளுக்கு ஒப்பான கடைவாய்ப்பற்களையும் உடைய சந்ததியாரும் உண்டு.

நீதிமொழிகள் 30:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு. திருப்தி அடையாத மூன்று உண்டு, போதும் என்று சொல்லாத நான்கும் உண்டு.

நீதிமொழிகள் 30:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே.

நீதிமொழிகள் 30:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தகப்பனைப் பரியாசம்செய்து, தாயின் கட்டளையை அசட்டைசெய்கிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் சாப்பிடும்.

நீதிமொழிகள் 30:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு.

நீதிமொழிகள் 30:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே.

நீதிமொழிகள் 30:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது; அவள் சாப்பிட்டு, தன்னுடைய வாயைத் துடைத்து; நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.

நீதிமொழிகள் 30:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமுடியாது.

நீதிமொழிகள் 30:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அரசாளுகிற அடிமைக்காகவும், உணவால் திருப்தியான மூடனுக்காகவும்,

நீதிமொழிகள் 30:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும், தன்னுடைய எஜமானிக்குப் பதிலாக மனைவியாகும் அடிமைப் பெண்ணுக்காகவுமே.

நீதிமொழிகள் 30:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பூமியில் சிறியவைகளாக இருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்கு உண்டு.

நீதிமொழிகள் 30:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும், கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும்,

நீதிமொழிகள் 30:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெலமில்லாத உயிரினமாக இருந்தும், தங்களுடைய வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுயல்களும்,

நீதிமொழிகள் 30:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ராஜா இல்லாமல் இருந்தும், கூட்டம் கூட்டமாகப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,

நீதிமொழிகள் 30:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி, அரசர்கள் அரண்மனைகளில் இருக்கிற சிலந்திப் பூச்சியுமே.

நீதிமொழிகள் 30:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு; விநோத நடையுள்ளவைகள் நான்கும் உண்டு.

நீதிமொழிகள் 30:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும்,

நீதிமொழிகள் 30:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பெருமையாய் நடக்கிற சேவலும், வெள்ளாட்டுக் கடாவும், ஒருவரும் எதிர்க்க முடியாத ராஜாவுமே.

நீதிமொழிகள் 30:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாக இருந்தால், கையினால் வாயை மூடு.

நீதிமொழிகள் 30:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.

Available Bible Translations

American Standard Version
Proverbs 30 (ASV) »
King James Version
Proverbs 30 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 30 (GW) »
World English Bible
Proverbs 30 (WEB) »
Louis Segond 1910
Proverbes 30 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 30 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 30 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 30 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 30 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 30 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 30 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 30 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 30 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 30 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 30 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 30 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 30 (RVA) »
La Sacra Bibbia
Proverbi 30 (RIV) »
圣 经 简体中文和合本
箴 言 30 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 30 (CUVT) »
Библия на русском
Притчи 30 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 30 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 30 (KAR) »
Българска Библия
Притчи 30 (BULG) »
聖書 日本語
箴言 30 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 30 (SOM) »
De Heilige Schrift
Spreuken 30 (NLD) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List