நீதிமொழிகள் Chapter 26 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 26 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 26 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 26:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கோடைக்காலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது.

நீதிமொழிகள் 26:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலவும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலவும், காரணம் இல்லாமல் சொன்னசாபம் தங்காது.

நீதிமொழிகள் 26:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.

நீதிமொழிகள் 26:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடுக்காதே; கொடுத்தால் நீயும் அவனைப்போல ஆவாய்.

நீதிமொழிகள் 26:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடு; கொடுக்காவிட்டால் அவன் தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பான்.

நீதிமொழிகள் 26:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன்னுடைய கால்களையே வெட்டிக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.

நீதிமொழிகள் 26:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடர்களின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.

நீதிமொழிகள் 26:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடனுக்கு மரியாதை கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போல் இருப்பான்.

நீதிமொழிகள் 26:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்.

நீதிமொழிகள் 26:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பலத்தவன் அனைவரையும் நோகச்செய்து, மூடனையும் வேலைவாங்குகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைவாங்குகிறான்.

நீதிமொழிகள் 26:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நாயானது தான் கக்கினதை சாப்பிடும்படித் திரும்புவதுபோல, மூடனும் தன்னுடைய மூடத்தனத்திற்குத் திரும்புகிறான்.

நீதிமொழிகள் 26:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால், அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம்.

நீதிமொழிகள் 26:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.

நீதிமொழிகள் 26:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.

நீதிமொழிகள் 26:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து அதைத் தன்னுடைய வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.

நீதிமொழிகள் 26:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.

நீதிமொழிகள் 26:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்து இழுக்கிறவனைப்போல இருக்கிறான்.

நீதிமொழிகள் 26:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,

நீதிமொழிகள் 26:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்படியே, தன்னோடு இருந்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனிதனும் இருக்கிறான்.

நீதிமொழிகள் 26:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
விறகில்லாமல் நெருப்பு அணையும்; கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும்.

நீதிமொழிகள் 26:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, கோபக்காரன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.

நீதிமொழிகள் 26:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும்.

நீதிமொழிகள் 26:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போல இருக்கும்.

நீதிமொழிகள் 26:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பகைஞன் தன்னுடைய உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன்னுடைய உதடுகளினால் சூதுபேசுகிறான்.

நீதிமொழிகள் 26:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவன் தாழ்மையாக பேசினாலும் அவனை நம்பாதே; அவனுடைய இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.

நீதிமொழிகள் 26:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.

நீதிமொழிகள் 26:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.

நீதிமொழிகள் 26:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பொய்நாவு தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பகைக்கும்; முகஸ்துதி பேசும் வாய் அழிவை உண்டாக்கும்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Proverbs 26 (ASV) »
King James Version (KJV)
Proverbs 26 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 26 (GW) »
Berean Bible (BSB)
Proverbs 26 (BSB) »
World English Bible (WEB)
Proverbs 26 (WEB) »
French Bible (LSG)
Proverbes 26 (LSG) »
German Bible (LUTH1912)
Sprüche 26 (LUTH1912) »
Telugu Bible (TELIRV)
సామెత 26 (TELIRV) »
Hebrew Bible (HEB)
משלי 26 (HEB) »
Portuguese Bible (BSL)
Provérbios 26 (BSL) »
Vietnamese Bible (VIE)
Châm Ngôn 26 (VIE) »
Spanish Bible (RVA)
Proverbios 26 (RVA) »
Italian Bible (RIV)
Proverbi 26 (RIV) »
Chinese Simplified (CUVS)
箴 言 26 (CUVS) »
Chinese Traditional (CUVT)
箴 言 26 (CUVT) »
Albanian Bible (ALB)
Fjalët e urta 26 (ALB) »
Swedish Bible (SV1917)
Ordspråksboken 26 (SV1917) »
Russian Bible (RUSV)
Притчи 26 (RUSV) »
Hungarian Bible (KAR)
Példabeszédek 26 (KAR) »
Bulgarian Bible (BULG)
Притчи 26 (BULG) »
Japanese Bible (JPN)
箴言 26 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salomos Ordspråk 26 (NORSK) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List