நீதிமொழிகள் Chapter 15 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 15 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 15 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 15:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.

நீதிமொழிகள் 15:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.

நீதிமொழிகள் 15:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது.

நீதிமொழிகள் 15:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.

நீதிமொழிகள் 15:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.

நீதிமொழிகள் 15:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு.

நீதிமொழிகள் 15:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; மூடர்களின் இருதயமோ அப்படியல்ல.

நீதிமொழிகள் 15:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.

நீதிமொழிகள் 15:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.

நீதிமொழிகள் 15:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.

நீதிமொழிகள் 15:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ?

நீதிமொழிகள் 15:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.

நீதிமொழிகள் 15:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.

நீதிமொழிகள் 15:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும்.

நீதிமொழிகள் 15:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நிரந்தர விருந்து.

நீதிமொழிகள் 15:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.

நீதிமொழிகள் 15:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது.

நீதிமொழிகள் 15:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.

நீதிமொழிகள் 15:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.

நீதிமொழிகள் 15:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான்.

நீதிமொழிகள் 15:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான்.

நீதிமொழிகள் 15:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.

நீதிமொழிகள் 15:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

நீதிமொழிகள் 15:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும்.

நீதிமொழிகள் 15:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.

நீதிமொழிகள் 15:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கர்களுடைய நினைவுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.

நீதிமொழிகள் 15:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்; லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.

நீதிமொழிகள் 15:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.

நீதிமொழிகள் 15:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.

நீதிமொழிகள் 15:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும்.

நீதிமொழிகள் 15:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்திலே தங்கும்.

நீதிமொழிகள் 15:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.

நீதிமொழிகள் 15:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

Available Bible Translations

American Standard Version
Proverbs 15 (ASV) »
King James Version
Proverbs 15 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 15 (GW) »
World English Bible
Proverbs 15 (WEB) »
Louis Segond 1910
Proverbes 15 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 15 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 15 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 15 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 15 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 15 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 15 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 15 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 15 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 15 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 15 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 15 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 15 (RVA) »
La Sacra Bibbia
Proverbi 15 (RIV) »
圣 经 简体中文和合本
箴 言 15 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 15 (CUVT) »
Библия на русском
Притчи 15 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 15 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 15 (KAR) »
Българска Библия
Притчи 15 (BULG) »
聖書 日本語
箴言 15 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 15 (SOM) »
De Heilige Schrift
Spreuken 15 (NLD) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List