நீதிமொழிகள் Chapter 22 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 22 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 22 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 22:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
திரளான செல்வத்தைவிட நற்புகழே தெரிந்துகொள்ளப்படக்கூடியது; பொன் வெள்ளியைவிட தயையே நலம்.

நீதிமொழிகள் 22:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செல்வந்தனும், தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் யெகோவா.

நீதிமொழிகள் 22:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.

நீதிமொழிகள் 22:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தாழ்மைக்கும் யெகோவாவுக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் செல்வமும், மகிமையும் ஜீவனும் ஆகும்.

நீதிமொழிகள் 22:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முட்களும் கண்ணிகளும் உண்டு; தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளைவிட்டுத் தூரமாக விலகிப்போவான்.

நீதிமொழிகள் 22:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பிள்ளையை நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவனுடைய முதிர்வயதிலும் அதை விடாமல் இருப்பான்.

நீதிமொழிகள் 22:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செல்வந்தன் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.

நீதிமொழிகள் 22:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவனுடைய கடுங்கோபத்தின் கோல் ஒழியும்.

நீதிமொழிகள் 22:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன்னுடைய உணவில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.

நீதிமொழிகள் 22:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது சண்டை நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.

நீதிமொழிகள் 22:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்கு நண்பனாவான்.

நீதிமொழிகள் 22:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவுடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார்.

நீதிமொழிகள் 22:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வெளியிலே சிங்கம், வீதியிலே கொல்லப்படுவேன் என்று சோம்பேறி சொல்லுவான்.

நீதிமொழிகள் 22:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஒழுங்கீனமான பெண்களின் வாய் ஆழமான படுகுழி; யெகோவாவுடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.

நீதிமொழிகள் 22:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பிள்ளையின் இருதயத்தில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.

நீதிமொழிகள் 22:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன், தனக்குக் குறைச்சல் உண்டாகவே செல்வந்தனுக்குக் கொடுப்பான்.

நீதிமொழிகள் 22:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.

நீதிமொழிகள் 22:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவைகளை உன் உள்ளத்தில் காத்து, அவைகளை உன்னுடைய உதடுகளில் நிலைத்திருக்கச்செய்யும்போது, அது இன்பமாக இருக்கும்.

நீதிமொழிகள் 22:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன் நம்பிக்கை யெகோவாமேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.

நீதிமொழிகள் 22:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை பதிலாக சொல்லும்படிக்கும்,

நீதிமொழிகள் 22:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆலோசனையையும், ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா?

நீதிமொழிகள் 22:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்தாதே.

நீதிமொழிகள் 22:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய உயிரைக் கொள்ளையிடுவார்.

நீதிமொழிகள் 22:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கோபக்காரனுக்குத் தோழனாகாதே; கோபமுள்ள மனிதனோடு நடக்காதே.

நீதிமொழிகள் 22:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன்னுடைய ஆத்துமாவுக்குக் கண்ணியை கொண்டுவருவாய்.

நீதிமொழிகள் 22:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உறுதியளித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.

நீதிமொழிகள் 22:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செலுத்த உனக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.

நீதிமொழிகள் 22:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய முன்னோர்கள் நாட்டின ஆரம்ப எல்லைக்குறியை மாற்றாதே.

நீதிமொழிகள் 22:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய வேலையில் ஜாக்கிரதையாக இருக்கிறவனை நீ கண்டால், அவன் சாதாரணமானவர்களுக்கு முன்பாக நிற்காமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.

Available Bible Translations

American Standard Version (ASV)
Proverbs 22 (ASV) »
King James Version (KJV)
Proverbs 22 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 22 (GW) »
Berean Bible (BSB)
Proverbs 22 (BSB) »
World English Bible (WEB)
Proverbs 22 (WEB) »
French Bible (LSG)
Proverbes 22 (LSG) »
German Bible (LUTH1912)
Sprüche 22 (LUTH1912) »
Telugu Bible (TELIRV)
సామెత 22 (TELIRV) »
Hebrew Bible (HEB)
משלי 22 (HEB) »
Portuguese Bible (BSL)
Provérbios 22 (BSL) »
Vietnamese Bible (VIE)
Châm Ngôn 22 (VIE) »
Spanish Bible (RVA)
Proverbios 22 (RVA) »
Italian Bible (RIV)
Proverbi 22 (RIV) »
Chinese Simplified (CUVS)
箴 言 22 (CUVS) »
Chinese Traditional (CUVT)
箴 言 22 (CUVT) »
Albanian Bible (ALB)
Fjalët e urta 22 (ALB) »
Swedish Bible (SV1917)
Ordspråksboken 22 (SV1917) »
Russian Bible (RUSV)
Притчи 22 (RUSV) »
Hungarian Bible (KAR)
Példabeszédek 22 (KAR) »
Bulgarian Bible (BULG)
Притчи 22 (BULG) »
Japanese Bible (JPN)
箴言 22 (JPN) »
Norwegian Bible (NORSK)
Salomos Ordspråk 22 (NORSK) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List